Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே எ. ஹமீட்
முஸ்லிம்கள் தமது தனித்துவமான கட்சியான முஸ்லிம் காங்கிரஸைப் பலப்படுத்த தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டுமென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில், சமகால அரசியல் மற்றும் கட்சி மறுசீரமைப்பு குறித்து கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், முஸ்லிம் மக்களுக்குரிய ஒரேயொரு தேசிய பலம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸாகும். முஸ்லிம்களின் சக்தியும் அதுதான். ஆனால், அதனை சீர்குலைக்க பல்வேறு சதிமுயற்சிகள் நடக்கின்றன. அதிலிருந்து பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
அத்துடன், முஸ்லிம்களின் பிரச்சினைகளை மிக தைரியமாக எடுத்துக்கூறுகின்ற ஒரேயொரு முஸ்லிம் கட்சி எமது கட்சியாகும். அது ஒருபோதும் நிதானம் இழந்து விடுவதில்லை என்று கூறிய அவர, முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தனி நபர்கள் முக்கியமல்லர். இந்த இயக்கம் நீண்டகாலம் வாழ வேண்டும். அது எப்போதும் முஸ்லிம் சமூகத்துக்கு குரல் கொடுக்க வேண்டும். அதுவே முக்கியமாகும் என்றார்.
தேசிய அரசியலில் மாத்திரமல்லாமல், சர்வதேச அரசியல், சமூகங்கள் மற்றும் இயங்கங்களின் அவதானத்தையும் பெற்ற ஒரு கட்சியாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னை நிலைப்படுத்தியுமுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .