Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தைப் பேசித் தீர்க்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் மௌனம் காத்து காலம் கடத்தியதன் விளைவே இப்பிரச்சினையில் பேரினவாத சக்திகள் மூக்கை நுழைக்கக் காரணமெனதெரிவித்த கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளர். எம்.எஸ். உதுமொலெப்பை, கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் உறவு பேணப்பட்டு வந்துள்ளதெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இரு சமூகத்தினருக்குமிடையில் இருந்து வரும் எல்லைப் பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள் மற்றும் நிருவாக ரீதியான பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டி உள்ளதெனத் தெரிவித்த இவர், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படாமல் பிரிந்து செல்வார்களாயின் பேரினவாத சக்திகள் அதனைப் பயன் படுத்தி இரு சமூகங்களையும் பலவீனப்படுத்துவதற்கு முயல்வார்கள் என்பதனை அறிந்து செயற்பட வேண்டும் என்றார்.
குறிப்பாக தற்போது அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் தோன்றியுள்ள பிரச்சினையில் தமிழ், முஸ்லிம் உறவை பாதுகாக்க அரசியல் தலைமைகள் நிதானமாக செயற்பட்டு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுமுள்ள முஸ்லிம்களை ஒரு கட்சியின் கீழ் ஒன்றுமைப்படுத்தினார். முஸ்லிம்களின் வாக்கு உரிமை மூலம் பேரம் பேசலனினூடாக பெறப்பட்டட அரசியல் உரிமைகளையும், சலுகைகளையும் அவர் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய இன மக்களுக்காகவும் பயன்படுத்தினார். இதனை தற்போதுள்ள முஸ்லிம் தலைமைகளும் பின்பற்றி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago