2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடருமாயின் மு.கா. சா்வதேசம் கொண்டு செல்லும்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்நாட்டில், முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள், இனவாத செயற்பாடுகள் மேலும் தொடருமாயின், முஸ்லிம் காங்கிரஸ் அதனை சர்வதேசம் கொண்டு செல்லும் என முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

சமகால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக , ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் அட்டாளைச்சேனை அலுவலகத்தில் நேற்று  (08) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நல்லாட்சி  அரசாங்கம் அமைவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கூடுதலான பங்களிப்பை செய்துள்ளது மட்டுமல்லாது, அரசாங்கத்தை கொண்டு செல்தவற்கும் பக்கபலமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களின் அபிலாசைகள், அவர்களது ஜனநாயக செயற்பாடுகளுக்கு தடைகள், பாதிப்புகள் ஏற்படுமாயின் அதற்கான பிரதிபலனை இந்த அரசாங்கம் சந்திக்க வேண்டி ஏற்படும்.

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியிருந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நாட்டில் கொண்டுவரப்படவுள்ள பொருளாதார அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு மற்றும் இன நல்லுறவு போன்ற விடயங்களினால் நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் கிட்டவுள்ளது.

முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச் செயற்பாடுகளினால் நல்லாட்சி அரசாங்கம் மீது முஸ்லிம் சமூகம் நம்பிக்கை இழந்துள்ளனர். மேலும் கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தல் முறைமை, தொழில்வாய்ப்பு, அபிவிருத்தி நடவடிக்கை போன்றனவற்றில் அனைத்து இன மக்களும் அதிருப்பதியடைந்துள்ளனர். இவ்வாறான விடயங்களிலும் அரசாங்கம் பொறுப்புடன் நடந்து  மக்களின் நம்பிக்கையை வெற்றெடுக்க வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .