2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவோருக்கு அடிபணியோம்

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

  கண்டியில் ஒரு குழுவினர் கூட்டமொன்றை  நடத்தி, ஹலால், ஹராம், விவாக, விவாகரத்து சட்டம் போன்ற  ஒன்பது தீர்மானங்களை முன் வைத்து முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவோருக்கு அடிபணியமாட்டோமென    நாடாளுமன்ற உறுப்பினர்   எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தபோதும், தேரர்கள் உண்ணாவிரதம் இருப்பதனால் நாட்டில் பாரிய பிரச்சினைகள் உருவாகின்றன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார். 

"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் அரசாங்க தேசிய வேலைத்திட்டத்தின்  கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டினால் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை ஆசிரியர் விடுதி கட்டிடத் திறப்பு விழா நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை கல்லூரியின் அதிபர் ஏ.பீ முஜின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்:

 அண்மையில் இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்புச் சம்பவத்தினால் ஆயிரக்கணக்கான வருடங்கள் எமக்கிருந்த கௌரவத்தில் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிட்டுள்ளது. அந்த நாசகார செயலினால் குறிப்பாக பெண்கள் படும் அவஸ்தைகள் மிக மோசமாக இருக்கிறது. மகாநாயக்க தேரர்கள் எம்மை பதவிகளை மீண்டும் பெறுமாறு வேண்டிக்கொண்டார்கள். அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து அவர்களுக்கு நிலைமைகளை விளக்கி கூறினோம்,

 இந்த நாட்டு முஸ்லிங்களை வாடகைக்கு குடியிருக்கும் குடியிருப்பாளர்களைப் போல எண்ணிக்கொண்டிருக்கும் சில சக்திகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு நாங்கள் ஒருபோதும் வழிவிட மாட்டோம்'.

1956ஆம் ஆண்டு எங்களுக்கு இலங்கை அரசியலமைப்பு உருவாக்கித்தந்த அந்த சலுகைகளை இல்லாதொழித்து ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே இனம் என கதையளக்கிறார்கள்.

1956 ஆம் ஆண்டு சிங்கள மொழிக்கொள்கை மூலம் பண்டாராநாயக்காவுக்கு வந்த வாக்கு அலைபோல தேசிய கட்சிகள் தமது அரசியல் விஞ்ஞாபனத்தை வலுப்படுத்தி தெற்கில் தமது  அரசியலை முன்னெடுக்க செய்யும் அழுத்தங்களே இவை.

ஐ.தே.க வில் சம்பிக்க, நவீன் திஸாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, மொட்டு கட்சியில் உதய கம்மன்வில, விமல் வீரவங்ச, சுதந்திர கட்சியில்  தயாசிறி போன்றோர்களும் இன்னும் பலரும் இனவாத கொள்கையைக் கொண்டவர்கள்.' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X