Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் ஐந்தரை வயதுச் சிறுவன், காருக்குள் அடைபட்டு மூச்சுத்திணறி, ஞாயிற்றுக்கிழமை (06) மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலுவில் 6ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது லாபீர் முஹம்மது இன்ஸாப் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவன், தனது வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரைத் திறந்து உள்ளே சென்று, காரின் கதவுகளை பூட்டிக்கொண்டுள்ளார்.
எனினும், சிறுவனால் காரின் கதவுகளைத் திறக்க முடியாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, காருக்குள்ளேயே, சிறுவன் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனை காணவில்லையென சிறுவனின் பெற்றோர் தேடி வந்த நிலையில், காரின் உரிமையாளர் காரைத் திறந்து பார்த்த போது, சிறுவன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் சிறுவனின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
19 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
46 minute ago