2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மூலிகைப் பானம் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், ஆயுர்வேத மருந்தகங்களில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு, மூலிகைப் பானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் திங்கட்கிழமை (6)  சிகிச்சைக்காக வருகை தந்த மக்களுக்கு குறித்த மூலிகைப் பானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆயுர்வேத சுதேச மருத்துவ திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்பட்ட மூலிகைப் பானத்தை, நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.றிகாஸ் தலைமையிலான குழுவினர், நோயாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .