Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை-துவரங்காடு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், அநுராதபுரம் விஜயபுர பண்டாரநாயக்க மாவட்டத்தைச் சேர்ந்த கசுன் லக்ஸான் (28வயது) என்பவரே. இதேவேளை, அப்பகுதியைச் சேர்ந்த புவிராஜ ஜீவராஜா (27 வயது) இளைஞர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நிலாவெளி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் வருகை தந்ததாகவும் இவ் விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago