2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்

எஸ்.கார்த்திகேசு   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுகுட்பட்ட காஞ்சிகுடா பாவட்ட குளத்தடியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவரை, யானை தாக்கியதில், ஸ்தலத்திலே அக்குடுப்பஸ்தர் மரணமடைந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரம் 2, பாடசாலை வீதியில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணபிள்ளை சதாசிவம் (வயது 52) என்பவரே, இவ்வாறு மரணமடைந்தவராவார்.

இவர், தனது வீட்டில் இருந்து இன்று (04) காலை வேலைக்காச் சென்ற வேளை, குளத்தடியில் வைத்து யானை தாக்குதலுக்கு உள்ளகியுள்ளார்.

இவ்மரணம் தொடர்பான மேலதிக விசாரனைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .