Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2017 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிக்கம்பை வயல் பிரதேசத்தில் யானை தாக்கியத்தில் பரணில் (காவலரன்) உறக்கத்திலிருந்த விவசாயி ஒருவர், இன்று (02) அதிகாலை உயிரிழந்துள்ளாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கோளாவில் - 03 பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான (63 வயது) வைரமுத்து நடராசா என்பவரே உயிரிழந்தவராவார்.
நள்ளிரவு 12 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளான அவரை அதிகாலை 3 மணியளவில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்திருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்தார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
வழமைபோன்று வயல் காவலில் ஈடுபட்டிருந்த அவர், பரனில் சற்றுத் தூங்கிய போது குறித்த இடத்துக்கு வந்த யானையை கண்ட உடனிருந்தவர் குறித்த நபரை எழுப்புவதற்காக முயற்சித்துள்ளார்.
எனினும், யானை அருகில் வருவதைக் கண்டவர், தப்பியோடிபோதும் பரனிலிருந்த குறித்த விவசாயியை, யானை பரணிலிருந்து இழுத்தெடுத்து தாக்கியுள்ளது.
இதனை கண்ணுற்றவர்கள், உழவு இயந்திரங்களின் ஓசையோடு யானையை துரத்தியதாகவும் எனினும், விவசாயி படுகாயமுற்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த பிரதேசத்தில் நேற்று (01) இறந்த யானையின் உடலொன்று கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இன்று, இவ்விவசாயி கொல்லப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
55 minute ago
55 minute ago
3 hours ago