2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யானை-மனித மோதலுக்கு விரைவில் தீர்வு

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கான தீர்வு விரைவில் பெற்றுக் கொடுக்கபடுமென வன ஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.

இம்மாவட்டங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைக்க உடனடி நடவடிக்கை தொடர்பில், மகாஓயா சிவில் பாதுகாப்பு படை முகாம் கேட்போர் கூடத்தில்  நேற்று (28) மாலை  உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது .

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, நாளை முதல் அனைத்து மின்சார யானை வேலிகளிலும் இரவு நேர ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், மின்சார யானை வேலியின் 01 கி.மீ. தொலைவில் ஒரு காவல் நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் 04 காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இதற்கென புதிதாக 5,000  பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .