Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம், சுயதொழில் கடன் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புக்களுடனான 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் கையளித்து வைக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(25) இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த சுயதொழில் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட 32 கிராம சேவகர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட மிக வறிய 86 குடும்பங்களுக்கே இவ்வுபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்கேணி, தீகவாபி, அஷ்ரப் நகர், ஆலங்குளம், சம்புநகர் போன்ற கிராமங்களில் வாழும் இக்குடும்பங்களை திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களினூடாக இத்தெரிவு இடம்பெற்றது.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 86 குடும்பங்களின் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் முகமாக அவர்களின் வருமானத்தை ஈட்டும் வன்னம் தையல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரங்கள், நெற் குத்தும் இயந்திரங்கள், தச்சுத் தொழில் உபகரணங்கள், ஆழ்கடல் மீன் பிடி வலைகள், நீர் பம்பிகள், அப்பம் விற்பனை செய்பவர்களுக்காக கேஸ் அடுப்புக்கள், ஜஸ் விற்பனை செய்பவர்களுக்காக குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சீமெந்து கல் வெட்டும் இயந்திரங்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.
18 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago