Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் வீதியோரங்களில் பாதசாரிகளுக்கும் வாகனங்களுக்கம் இடையூறு விளைவிக்கக் கூடிய முறையில் மீன்கள், பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், செவ்வாய்க்கிழமைக்கு (07) முன்னர் அவ்விடங்களிலிருந்து வெளியேற வேண்டுமென, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான உபுல் பியலால் நேற்றுத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“வீதியோரங்களில் மீன் விற்பனை மற்றும் பொருட்களை விற்பனை செய்வதால், வீதி விபத்துகள் அதிகரித்துக் காணப்படுவதோடு, சூழலும் மாசடைகின்றது. இதனால், பொதுமக்களும் பாதசாரிகளும் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
"இதனைக் கருத்திற்கொண்டு, செவ்வாய்க்கிழமைக்குள் அவ்விடங்களில் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளை வெளியேறுமாறு அறிவித்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago