2025 மே 03, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன், எஸ்.கார்த்திகேசு

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோமாரிப்  பகுதியில் புதன்கிழமை  (14)  மாலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்

திருக்கோவில் 3ஆம் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோமநாதன் சிவரஞ்சன் (வயது 27) என்பவரே இவ்விபத்தில் பலியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவிலிலிருந்து பொத்துவில், றொட்டைக் கிராமத்தில் வசிக்கும் தனது தாயிடம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்துச் சம்பவித்தது. இவரது மோட்டார் சைக்கிளும்  சிறிய லொறி ஒன்றும் நேருக்குநேர் மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X