2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: சாரதி கைது

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்களாவடிப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறக்காமம், வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த 33 வயதுடைய ஏ.எல்.எம்.பாயிஸ் என்பவரே இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து குறித்த லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பாக  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X