2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் விவசாயி பலி

Gavitha   / 2016 ஒக்டோபர் 15 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலிம்நகர் பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், பஸ் சில்லுக்குள் சிக்குண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார்.

பொத்துவிலைச் சேர்ந்த எம்.ஜ.கால்டீன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து பொத்துவில் அறுகம்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை நிறுத்தி ஏற முயன்றபோதே தவறி வீழ்ந்து பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .