2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விபத்தில் வயோதிபர் படுகாயம்

Niroshini   / 2015 நவம்பர் 17 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, அட்டாளைச்சேனை லக்கிஸ்டோர் சந்தியில்  இன்று செவ்வாய்க்கிழமை சைக்கிளும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் சென்ற வயோதிபர் படுகாயமடைந்த நிலையில்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,மோட்டார் சைக்கிளில் சென்றவரும் சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.சுக்கூர்(வயது 65) என்ற வயோதிபரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

குறித்த வயோதிபர் சுகயீனம் காரணமாக அட்டாளைச்சேனை அரசினர் வைத்தியசாலையில் மருந்து எடுத்துக் கொண்டு சைக்கிளில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே படுகாயங்களுக்குள்ளானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .