2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நபர் பலி

Niroshini   / 2017 ஜனவரி 29 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகராசா சரவணன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கல்முனை கிட்டங்கி பாலத்தில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபர், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சவளக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை - உஹன பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.பியசிறி (வயது – 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்முனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் உஹனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த குறித்த நபர், கிட்டங்கிப் பாலத்தின் மேலால் வெள்ள நீர் பரவிப் பாய்ந்தோடியதைக் கண்டு மோட்டார் சைக்கிளை விட்டிறங்கி அதனைத் தள்ளிக் கொண்டு சென்றபோது, கால் தடுக்கி வழுக்கி விழுந்து வௌ்ளத்தில் இடித்துச்செல்லப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .