2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வயல்களுக்குள் படையெடுக்கும் காட்டு யானைகளினால் விவசாயிகள் பாதிப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை படாரக்கல்குள, கண்ட வயல் பிரதேசங்களில், வயல் நிலங்களுக்குள் திங்கட்கிழமை ( நள்ளிரவு) காட்டு யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளதென விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகளின் தொல்லையால் பெரும் போக நெற்செய்கையினை   தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாக கவலை  தெரிவிக்கின்றனர்.

தற்போது வேளாண்மை குடலைப்பருவ நிலையில் உள்ளதால் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே, விவசாய நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல வேண்டுமாயின், இந்த யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X