2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

’வரலாறு கூறும் நற்பிட்டிமுனை’; நூல் வெளியீடு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா

நற்பிட்டிமுனையைச் சேர்ந்த  எழுத்தாளர் எஸ்.சிவகுருநாதன் எழுதிய "வரலாறு கூறும் நற்பிட்டிமுனை"  எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழா, நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தில் நேற்று (18) மாலை   நடைபெற்றது.

கல்முனை வலய ஓய்வு நிலை கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன்  தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் கலந்துகொண்டார்.

இவ் விழாவில், நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம் மற்றும் சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தலைவர்  தம்பிராஜா ரவிராஜ், சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் திருமதி யோகேஸ்வரி இராமநாதன், ஸ்ரீபாத தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதி கே. துரைராஜசிங்கம் மற்றும் கிராமிய தொழில் துறைத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன்  ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.

நூல் தொடர்பான மதிப்பீட்டு உரையை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதி பதிவாளர் சஞ்சீவி சிவகுமார் நிகழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து வருகை தந்த அதிதிகளுக்கு நூல் பிரதிகளை நூலாசிரியர்  எஸ். சிவகுருநாதன் வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .