Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வி.சுகிர்தகுமார் / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுத் துரோகத்தை தான் இழைக்க மாட்டேனெனத் தெரிவித்த அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், அம்பாறை மாவட்ட மக்களின் நலனுக்காகவே, இறுதிவரை எப்போதும் தான் குரல் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
பல வருட காலமாக, அபிவிருத்தியின்றி பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படும் அக்கரைப்பற்று, தர்மசங்கரி மைதானத்துக்கான பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக, விளையாட்டுத்துறை அமைச்சினூடாக ஒதுக்கப்பட்டுள்ள 75 இலட்சம் ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் அமையவுள்ள இந்தப் பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, ஆலையடிவேம்பு பிரதேசச் செயலாளர் கே.லவநாதன் தலைமையில், நேற்று முன்தினம் (03) நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், இதுவரையில், அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றம் சென்றுள்ள உறுப்பினர்களுள் அதிக தடவைகள் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த உறுப்பினர் தானாகத்தான் இருப்பதாகக் கூறினார்.
சுமார் 35 தடவைகளுக்கு மேல், கடந்த மூன்றரை வருடங்களில் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்காகத் தான் குரல் கொடுத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்காலத்தில் பல கோடிகளுக்கும் ஏனைய வசதி வாய்ப்புகளுக்குமாக தான் விலைபேசப்பட்டதாகவும் ஆனாலும், அதற்குத் தான் அடிபணியவில்லை எனவும், இனியும் அடிபணியப் போவதில்லை என்றும், அவர் மேலும் தெரிவித்தார்.
10 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
52 minute ago
2 hours ago