2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வர்த்தக அனுமதிப்பத்திரம் பெறுதல்; கால அவகாசம் நீட்டிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற வியாபார நிலையங்களுக்கு, நடப்பு ஆண்டுக்குரிய வர்த்தக அனுமதிப்பத்திரத்தை (Trade Licence) பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம், ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக, கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதிக்குள், கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற அனைத்து வியாபார நிலையங்களுக்குமான வர்த்தக  அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென, மாநகர சபை பணித்துள்ளது.

தவறும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அபராதமும் அறவிடப்படும் எனவும், கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .