2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வறுமை ஒழிப்பு தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட வறுமை ஒழிப்பு தின நிகழ்வுகள் நேற்று (17) கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினால் ஐந்து நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இடம்பெற்ற இந்நிகழ்வில் திவிநெகும உதவி பெறும் குடும்பம்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு சர்வதேச தரத்திலான கனரக இயந்திர இயக்குநர் பயிற்சியை பூர்த்தி செய்த 25 இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், வீடற்ற 2 வறிய குடும்பங்;களுக்கு அமைக்கப்பட்ட வீடுகளைக் கையளித்தல்,  10 குடும்பம்களுக்கு தொழில் முயற்சிக்கான  கடன் வழங்குதல், உணவு உற்பத்திக்கான  பழக்கன்றுகள் வழங்குதல்,  திவிநெகும உதவிகளை பெற்று முன்னேற்றம் அடைந்த குடும்பங்கள் தமது உதவிபெரும் ஆவணங்களை அரசாங்கத்துக்கு மீளளித்தல்  போன்ற நிகழ்வுகள்  இடம்பெற்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .