Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 09 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா
வாக்குப் பலத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஆளுநர்களின் அதிகாரங்களைத் தகர்த்தெறிய முடியும் என, சுகாதாரப் பிரதியமைச்சர் பைஸால் காஸீம் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள மாகாணசபைகளில் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளின் அதிகாரங்கள் மாத்திரம், ஆளுநர்களின் கைகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. ஆனால், ஏனைய மாகாணங்களில் எந்த முதலமைச்சரும் எந்த ஆளுநரையும் கணக்கில் கொள்வதில்லை எனவும் அவர் கூறினார்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சனிக்கிழமை (8) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'தற்போது கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுசேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்' என்றார்.
'மேலும், அடுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுசேராமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதை நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றேன். ஒன்றுசேர்ந்து ஆட்சி அமைப்பதன் மூலமே இங்குள்ள மக்களின் வாழ்கைத்தரத்தை உயர்த்த முடியும்.
'தமிழ், முஸ்லிம் மக்களின் உறவை உடைக்க வேண்டும் என்று தற்போது ஒரு சில சக்திகள் செயற்பட்டு வருகின்றன. அன்று எமது கட்சியிலிருந்து தமிழர்களுடன் ஒன்றுபட வேண்டும் என்றவர்கள், தற்போது தாம் பிரிந்து நிற்க வேண்டும் என்று கூறும் நிலைமையும் காணப்படுகின்றது.
'எது எவ்வாறிருந்த போதிலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவரும் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருக்கின்றார்;' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago