Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லையெனத் தெரிவித்த களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியும், தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தலைவருமான ஷந்தன அபேயரத்ன, நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் இலங்கையர் என கைகோர்த்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார்.
தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அமைப்பின் ஒன்றுகூடல் சனிக்கிழமை அக்கரைப்பற்று மெங்கோ காடன் மண்டபத்தில் நடைபெற்றபோது, இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஷந்தன அபேயரத்ன, மேற்கண்டவாறு கூறினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். செயினுடீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பீடாதிபதியும், தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தலைவருமான ஷந்தன அபேயரத்ன அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் நிலைமை தற்போது மிக படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், மக்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். நாங்கள் வாக்களித்து ஆட்சி பீடம் ஏற்றியவர்கள், இன்று இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்கின்ற நிலை உருவாகியுள்ளது. நாட்டின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட சகல துறைகளும் பின்னோக்கியே காணப்படுகின்றன.இதனால், மக்கள் தனியார் துறையை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றுதெரிவித்த அவர்,
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக நாடு ஸ்திரத்தன்மையடைந்து அழிவுப் பாதைக்குச் செல்கின்றது எனவும் கூறினார்.
இதுகாலவரைக்கும் நாங்கள் வாக்களித்து அரசாங்கத்தை தாபித்துள்ளோம். இனிவரும் காலங்களில் நாங்கள் நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டுமெனவும், நாட்டில் வாழும் சகல மக்களினதும் கருத்துகளைப் பெற்று புத்திஜீவிகள் அமைப்பை நாட்டின் நலன்கருதி ஏற்படுத்தியுள்ளோம். இதில் இணைந்து கொள்ளுமாறு அரசியல் கட்சிகள் உட்பட சகல தொழிற்சங்கங்களுக்கும், தொழில்வல்லுனர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்..
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago