2025 மே 05, திங்கட்கிழமை

‘வாடகை அறவீடுகளில் சலுகைகள் வழங்கவும்’

Princiya Dixci   / 2021 ஜூன் 27 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலை கருதி, வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்கிய உரிமையாளர்கள் விலைக்கழிவு சலுகைகளை வழங்க முன்வர வேண்டுமென அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம்.சபீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,“கொரோனாவின் பாதிப்புக்கள் ஏழை – பணக்காரன், தொழிலாளி - முதலாளி என அனைவரது பொருளாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது. வசதிபடைத்தோரால் இந்நிலைமையை எதிர்கொள்ள முடிந்தாலும் தொழிலாளர்கள் இதை எதிர்கொள்வதில் பெரும் சிரமங்களை அனுபவிப்பதை எம்மால் காண முடிகின்றது.

“இந்நிலையில், வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்கிய கட்டட  உரிமையாளர்கள் விலைக்கழிவுகள் அல்லது சலுகைகள் அடிப்படையில் வாடகைகளைப் பெற முன்வரவேண்டும். அதன்மூலம் சமூகத்தில் தம்மால் முடியுமான உதவிகளை செய்தவர்களாக மாறிவிடுவோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X