2025 மே 03, சனிக்கிழமை

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் அனுமதி மறுப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதாக கூறி, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தமக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மீனவர்கள் தமக்கு இடைஞ்சல் விளைவிப்பதாகவும் தெரிவித்து, கல்முனை பிராந்திய மீனவர்கள், கல்முனையில் நேற்று (16) நண்பகல் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்முனை மீனவர்கள், “கடந்த பல வருடங்களாக இந்தப் பிரச்சினை இருந்து வருகின்றது. ஆனால், இப்போது கொரோனா வைரஸ் தொற்றுக் காலம் என்பதால் பிரச்சினை அதிகரித்துள்ளது. எங்களுக்கென்று ஒழுங்கான மீனவத் துறைமுகம் இல்லது இருப்பதை பல கட்டங்களாக போராட்டங்கள் மூலமாகவும், அரசியல்வாதிகளுக்கு மகஜர் கையளித்தும், ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்து வந்துள்ளோம். 

“இப்போது வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் எங்களின் படகுகளை நிறுத்தி வைப்பதில் பாரிய சிக்கல் தோன்றியுள்ளது. அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மீனவர்கள், மீன்பிடி அமைப்புக்கள் எங்களால் அப்பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவி விடும் என்று அச்சம் தெரிவித்து, எங்களை வாழைச்சேனை பிரதேசத்தில் நுழைய அனுமதிக்கிறார்கள் இல்லை.

“கல்முனை முதல் அட்டாளைச்சேனை வரை சுமார் 350 படகுகள் உள்ளன. அந்த படகுகளை நம்பி, 3,000 குடும்பங்கள் உள்ளன. இவ்விடயத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலையிட்டு, உடனடியாக நல்ல தீர்வொன்றை பெற்றுத்தர முன்வரவேண்டும். தவறும் பட்சத்தில், வேறுவழியில்லாமல் குடும்பத்துடன் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டியதே வழியாக இருக்கின்றது” என்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X