Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஒலுமுதீன் கியாஸ் / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
உலக எழுத்தறிவு தினத்தையொட்டி, பாடசாலை மாணவர்கள் மத்தியில் பத்திரிகை வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்று (16) விசேட செயற்றிட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனை, பாடசாலை ஊடகக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்தச் செயற்றிட்டத்தில் ஒவ்வொரு வகுப்புக்கும் வாசிப்பு மேசை ஒன்றை வழங்கி, அதில் தினசரி பத்திரிகைகளை வைப்பதன் மூலம் மாணவர்கள் மத்தியில் தினசரி பத்திரிகைகளை வாசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்கள் மூலம் சமூகத்துக்கு பத்திரிகை வாசிப்புப் பழக்கத்தை கொண்டு செல்வதே இந்த செயற்றிட்டத்தின் நோக்கமாகும் என, ஊடக கழக பொறுபாசிரியர் கியாஸ் ஷாபி தெரிவித்தார்.
இதன்போது, ஊடகக் கழகத்தால் சேகரிக்கப்பட்ட வாசிப்பு மேசைகளை கழக அங்கத்தவர்கள் அதிபர், ஆசிரியர்களிடம் கையளித்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் தினசரி பத்திரிகைகளை வாசித்து முன்னோடி நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தனர்.
இறுதியாக, பத்திரிகை வாசிப்பு பழக்கத்தை பாடசாலையில் இருந்து சமூகத்துக்கு கொண்டு செல்வோம் என, ஊடக கழக அங்கத்தவர்கள் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டார்கள்.
2 hours ago
6 hours ago
24 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
24 Sep 2025