2025 மே 03, சனிக்கிழமை

விண்ணப்பம் கோரல்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் திருக்கோவில் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2021ஆம் வருட 01ஆம் தொகுதிக்கான பயிலுநர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, நிலையப் பொறுப்பதிகாரி ஈ. திலகராஜ் தெரிவித்தார்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், குளிரூட்டி, வாய்வு சீராக்கி திருத்துநர், தையல் (சிறுவர் மற்றும் மகளிர்), மர கைவினைஞர் (தளபாடம்) ஆகிய பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

விண்ணப்பிக்கும் இளைஞர், யுவதிகள் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பொறுப்பதிகாரி, தொழிற்பயிற்சி நிலையம், பாடசாலை வீதி, விநாயகபுரம், திருக்கோவில் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை 0711213378 எனும் அலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியுமென, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X