2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

வி.சுகிர்தகுமார்   / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று, பனங்காட்டில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் 26 வயதுடைய இராசதுரை பவீந்திரன் எனும் இளைஞன், சம்பவ இடத்திலேயே பலியானாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பனங்காட்டு கிராமத்தில் இருந்து நகர் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிரே இருந்த மரத்தின் மீது மோதி, வீதியின் மறு புறத்தே இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்றபோது தலைக்கவசம் அணியாத காரணத்தாலேயே தலையில் பலத்த அடி வீழ்ந்தாகவும் இதன் காரணமாகவே, இவ்விளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனின் தந்தை, யானையின் தாக்குதலால் சில வருடங்களுக்கு முன்னர் மரணித்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளமை, பனங்காட்டு மக்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .