Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 15 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
அம்பாறை, வளத்தாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சாய்ந்தமருதில் இருந்து அம்பாறை நகருக்கு நேற்று (14) சென்று திரும்பி வரும்போது, அம்பாறை- காரைதீவு பிரதான வீதியில், வளத்தாப்பிட்டி வளைவில் இவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே இரண்டு பிள்ளைகளின் தந்தையான எம்.முஹம்மத் அஷாப் (வயது 41) எனும் இந்த வர்த்தகர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடன் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த இவரது உதவியாளர் ஒருவர் படுகாயமடைந்து, அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வர்த்தகரின் திடீர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து சாய்ந்தமருது நகரில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago