2025 மே 05, திங்கட்கிழமை

வியாபாரத்துக்கு அனுமதிக்க அன்டிஜன்; ஒருவருக்கு தொற்று

Princiya Dixci   / 2021 மே 31 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வியாபாரிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கு முகமாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில், மாவடிப்பள்ளி வியாபாரி ஒருவருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டுள்ளது.

மொத்தமாக 26 வியாபாரிக்கான அன்டிஜன் பரிசோதனையின் போது, மாவடிப்பள்ளி பிரதேசத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன், ஏனைய அனைத்து முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு, பொது சுகாதார பரிசோதகர்  ஜமீல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இதில் இணைந்து மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X