2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விளக்கமறியல் நீடிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட ஐவரை, ஜனவரி மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்தறை நீதவான் எச்.எம்.எம்.பஸீல், இன்று (20) உத்தரவிட்டார்.

மேற்படி பிரதான சந்தேகநபர், கடந்த 12ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்த போது, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை உருக்கி, நகைக்கடைகளில் அடகு வைக்கப்பட்டுள்ள அதன் உரிமையாளர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X