Princiya Dixci / 2021 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள பொது விளையாட்டு மைதானங்களில் விளையாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
பொது விளையாட்டு மைதானங்களில் சட்டவிரோதமாக ஒன்றுகூடி விளையாட்டில் ஈடுபடுவதாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இவ்வாறு விளையாடுபவர்கள் கைது செய்யப்பட்டு, அவ்விடத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கொவிட்-19 மூன்றாவது அலையின் தாக்கம் காரணமாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, காரைதீவு மற்றும் நிந்தவூர் ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அவதானத்துக்குரிய அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் அரசாங்கத்தினால் விடுக்கப்படும் அறிவித்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் இதனை மீறுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago