2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனம்

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

  சகா

341 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை நிரந்தர நியமனம் வழங்கப்படவிருப்பதாகவும் சகல விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களும் அந்தந்த வலயக் கல்விப் பணிமனைக்குச் சென்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு  உடனடியாக தங்களுக்கான பாடசாலைக்குச் சென்று கடமையேற்குமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவசரஅறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

இவர்களது பெயர் நியமிக்கப்பட்ட பாடசாலை மற்றும் வலயம் தொடர்பான பூரண விபரம் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள  இணையத்தளத்தில் www.eastpde.edu.lk   வெளியிடப்பட்டுள்ளதால்,பெயர் வராத விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள்  தேசியபாடசாலைக்கு நியமிக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் உயர்கல்விஅமைச்சின் தேசிய பாடசாலைக் கிளையுடன் தொடர்புகொண்டு தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் பணிப்பாளர் மன்சூர் மேலும் தெரிவித்தார்.

 கொழும்பு இசுருபாய   கல்வியமைச்சிலிருந்து இவர்களுக்கான நியமனக்கடிதங்களை   வழங்குமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள், இரவோடிரவாக நியமனக்கடிதங்களை தயாரித்து இன்று ஞாயிற்றுக்கிழமை அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளர்களிடம் நேரடியாக சேர்த்துள்ளனர்.

எனவே குறித்த விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள் வலயக்கல்விப்பணிமனைக்கு சென்று நியமனக்கடிதத்தைப்பெற்று நியமிக்கப்பட்ட பாடசாலையில் கடமையை பொறுப்பேற்கவேண்டும்.தற்காலிக நியமனக் கடிதங்களுடன் பாடசாலைகளில் இணைக்கப்பட்ட இவர்களது 42நாள் உள்ளக பயிற்சிக்காலம் கடந்த வெள்ளியுடன் (26) நிறைவடைந்தமை குறிப்பி டத்தக்கது.

  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .