Editorial / 2022 ஜனவரி 18 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாண விழிப்புலனற்றோர் அமைப்பின் மாகாண காரியாலயத் திறப்பு விழாவும் கௌரவிப்பு வைபவமும் அட்டாளைச்சேனையில் நேற்று (17) நடைபெற்றது.
விழிப்புலனற்றோர் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஏ.எம். அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நளீல், அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜுனைடீன் ஆகியோர் கலந்துகொண்டு, வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இக்காரியாலயம் இயங்குமென தலைவர் ஏ.எம்.அப்துல் சலாம் தெரிவித்தார்.
விழிப்புலனற்றவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் ஏனைய உரிமைகளையும் சாதாரண நபர்களுக்கு இணையாக பெற்றுக் கொடுக்கக் கூடிய நோக்கத்தின் அடிப்படையில் இவ் அமைப்பானது செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
விழிப்புலனற்றவர்கள் சுயமாக நடமாடக் கூடிய வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிடல் வெள்ளைப் பிரம்பை வழங்குவதற்கும், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago