Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
நடராஜன் ஹரன் / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துவில், பிரதேசத்துக்குட்பட்ட சில பகுதிகளில் காணப்படும் தமது 300 ஏக்கர் வேளாண்மைக் காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் அடையாளப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தக் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அதனை வனவளத் திணைக்களம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேவேளை, இந்தக் குற்றசாட்டுத் தொடர்பில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பொத்துவில் அலுவலக அதிகாரி, இந்தக் காணி வனவளப் பாதுகாப்பு திணைக்களத்துக்குச் சொந்தமானதென 2010ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
காணியின் உண்மையான உறுதிப்பத்திரம் இருந்தால் அதனை தமது அலுவலத்துக்குக் கொண்டுவந்து காண்பிக்குமாறும் அதன் பின்னர் அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
01 May 2025
01 May 2025