Editorial / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம். இர்சாத்
அம்பாறை மாவட்ட, விவசாயிகளின் நலனைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்வதற்கு, 26000 ஏக்கர் காணிக்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 30000 ஏக்கர் காணிக்கு அனுமதியினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹகீம் அவர்களிடம் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேலைவாய்ப்புச் செயளாளருமான ஏ.எல். தவம் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
மேலும், நாட்டில் ஒருசில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் சற்று உயர்ந்து காணப்படுவதனால், இந்த மாவட்டத்தில் முக்கிய தொழிலாகக் காணப்படுகின்ற விவசாயத்தினை அதிகரிபதற்கான அனுமதியினைப்பெற்றுத்தருமாறும் வேண்டிக்கொண்டார்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025