Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 31 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி. அன்சார்)
அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்றவற்றிக்கான எரிபொருளினை (டீசல்) பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் விவசாயிகள் தங்களின் வயல்களில் அறுவடை செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை மற்றும் மல்வத்தை கமநல சேவைகள் மத்திய நிலையத்துக்குட்பட்ட பிரதேசங்களில் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் விவசாயக் காணிகளில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸின் அறிவுறுத்தலுக்கமைய, விவசாயிகளுக்கு கமநல சேவைகள் மத்திய நிலையங்களில் ஊடாக ஏக்கர் ஒன்றுக்கு 15 லீற்றர் வீதம் எரிபொருள் (டீசல்) பங்கீட்டு அட்டை மூலம் விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளன. டீசல் கிரமமான முறையில் வழங்குவதற்கு எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறையில் நான்கு எரிபொருள் நிலையங்களிலும் உழவு இயந்திரம் மற்றும் கலன்களின் மூலம் டீசலினை பெற்றுக் கொள்வதற்காக விவசாயிகள் நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருக்கின்ற போதிலும் டீசலினை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
டீசல் தட்டுப்பாடு காரணமாக அதனை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் டீசலினை வழங்குவதற்கு சம்மாந்துறையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர் முன்வர வேண்டும்.
எனவே, எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்ற போதிலும் வேளாண்மை அறுவடை செய்வதற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கான பொறிமுறையினை அதிகாரிகளும், எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினரும் முன்னெடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
11 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
53 minute ago
2 hours ago