Princiya Dixci / 2020 நவம்பர் 09 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சுனாமி வீட்டுத் திட்டங்களில் வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட சுனாமி வீட்டுத் திட்டத்திலுள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, குடிநீர், மலசலகூடம், துப்புரவு மற்றும் பராமரிப்பு, வடிகான், வீட்டுப் பராமரிப்பு ஆகிய பிரச்சினைகளும் பொது சொத்துகள் உரிய பராமரிப்பு இன்மை தொடர்பாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரிடமும் அறிவிக்கப்பட்டு இதற்கான நிதி பெறப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இதற்கு முதற்கட்டமாக கல்முனைப் பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபை ஊடாக வீட்டுத் திட்டத்திலுள்ள வடிகான் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
8 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Jan 2026