Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீடு உடைக்கப்பட்டு 2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயது சந்தேக நபர் போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸார் புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி வீடு ஒன்று உடைக்கப்பட்டு 2 பவுண் தங்க நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் திங்கட்கிழமை (11) அன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சம்மாந்துறை பொலிஸார் நெசவாலை வீதி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபரை 3 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது கடந்த திங்கட்கிழமை(11) அன்று வீடு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேக நபர் உட்பட சான்றுப் பொருட்கள்யாவும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .