Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வீதியோர வியாபாரங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் சக்கி, இன்று (27) தெரிவித்தார்.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கமைய, அக்கப்பரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, சுகாதார பகுதியினரும் பொலிஸாரும் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று நகருக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவசியத் தேவையின்றி பொதுமக்கள் எவரும் வீட்டில் இருந்து வெளியேறி வேண்டாமெனவும், அநாவசியமான போக்குவரத்தில் ஈடுபட வேண்டாமெனவும் தெரிவித்தார்.
பொதுச் சந்தைக்கு வரும் பொதுமக்களும் வியாபாரிகளும் பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்படுகின்ற ஆலோசனைகளைப் பின்பற்றி செயற்படுமாறும் மேயர் கேட்டுள்ளார்.
வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சமூக இடைவெளியைப் பேணும் முகமாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.
19 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
19 minute ago