2025 மே 16, வெள்ளிக்கிழமை

வெள்ளப் பாதிப்பை நேரில் ஆராய்ந்தார் கலையரசன் எம்.பி

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகிர்தகுமார், கனகராசா சரவணன்

ஆலையடிவேம்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், இன்று (23) நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட வீடுகளையும் அவதானித்தார். 

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை வழங்க துரித நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதிளித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று தெற்கு தாழ் நில பிரதேசத்தில் வாழும் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

வீதிகளும் குடியிருப்புக்களும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மூன்று தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த மழை நேற்று வரை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .