Editorial / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, பைஷல் இஸ்மாயில், நடராஜன் ஹரன்
அம்பாறை மாவட்டத்தில் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நீதி வழங்கக் கோரியும் போட்டிப் பரீடசையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனத்தை வழங்குமாறு கோரியும், வேலையில்லாப் பட்டதாரிகள், காரைதீவு பிரதேச சபைக்கு முன்னால் நேற்று (09) மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண சபையால் நடத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தும் ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்க்கப்படாத பட்டதாரிகள் அனைவருக்கும் ஆசிரிய நியமனத்தை வழங்குமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“அரசே பாகுபாடு காட்டாதே”, “போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளை புறக்கணிக்காதே”, “சமூக தலைமைகள் எங்கே?”, “அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நீதி தா” போன்ற சுலோபங்களை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தன்னே ஆனந்த தேரர், “எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்காவிட்டால் நாம் தேர்தலை முற்றிலும் புறக்கணிக்கப்போம். இதற்கு மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் மிகவும் விரைவில் தீர்மானத்தைப் பெற்றுத்தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.
38 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago