எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்திலுள்ள சிறுபோக நெற்செய்கை அறுவடையின் பின்னர் நெற்செய்கை காணிகளில் காணப்படும் வைக்கோலை எரிக்க வேண்டாமென அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று (21) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மீதமாய் கிடைக்கக் கூடிய வைக்கோலை எரிப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகள் மற்றும் வைக்கோலை நிலத்தில் இடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகள் தொடர்பாக விழிப்புணர்வு பேரணிகளை நடத்தியுள்ளதோடு, பொது அறிவித்தல் மற்றும் துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் வைக்கோலை எரிப்பதை காணமுடிகின்றது. இவ்வாறு வைக்கோலை எரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
வைக்கோலை மண்ணுடன் சேர்ப்பதன் மூலம் மண்ணின் இரசாயன இயல்புகள், மண்ணின் பௌதீக இயல்புகள், உயிரியல் தன்மைகள் என்பன விருத்தியடைகின்றன. இவ்வாறான பல்வேறு நன்மைகளை பெற வைக்கோலை எரிக்காமல் மண்ணுடன் கலந்து சேதனைப் பசளைகளாகப் பயன்படுத்தினால் கூடுதலான விளைச்சளை பெற முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026