2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வைத்தியசாலைக்கு முன்னால் சாலை மறியல் போராட்டம்

Editorial   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் ஊழியர்களின் அலட்சியம் மற்றும் வைத்தியசாலையில் காணப்படும் பௌதீக வளப் பற்றாக்குறைகளை கண்டித்தும், வைத்தியசாலையை மூடி, வைத்தியசாலைக்கு முன்னால் பிரதான வீதிக்கு அருகில், பொதுமக்கள், சாலை மறியல் போராட்டத்தில் இன்று  (17)  ஈடுபட்டனர்.

 

காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த சாலை மறியல் போராட்டம், 9.30 மணி வரை இடம்பெற்றது. இதனால், கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு, அங்கு பதற்ற நிலையும் ஏற்பட்டது.

நள்ளிரவு 12.30 மணியளவில் நோயாளர் ஒருவர் சிகிச்சைக்காக சென்ற போது, அங்கு கடமையிலிருந்த சுகாதார உத்தியோகத்தர்கள் அலட்சியமாக நடந்துகொண்டதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

 “இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அசமந்தப் போக்குடன் இருக்கின்றனர். இரவு நேரங்களில் சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரீங்கங்களுக்கு ஆளாகி வருகின்றனர்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

மாவட்ட வைத்தியசாலையாக இருந்த பாலமுனை மாவட்ட வைத்தியசாலை தற்போது பிரதேச வைத்தியசாலையாக தரம் குறைத்துள்ளதால், வைத்தியசாலையில் நீண்ட காலமாக மருந்துப் பொருட்களோ, நோயாளர்களுக்கான விடுதி வசதிகளோ வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும் இப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.

அவ்விடத்துக்கு விரைந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார், கல்முனை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீன் ஆகியோர், பொதுமக்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில், ஒரு வார காலத்துக்குள் இப்பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத் தருவதாகவும், சம்மந்தப்பட்ட சுகாதார உத்தியோகத்தர்களை இடமாற்றுவதாகவும் வாக்குறுதியளித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதோடு, வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .