Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 ஜனவரி 24 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண முஸ்லிம்களை இழிவுபடுத்தி பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவருமான ஷபீக் ரஜாப்தீன், அப்பதவிகளில் இருந்து இன்று (24) ராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரியதை தொடர்ந்தே, ஷபீக் ரஜாப்தீன் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்மாந்துறையை சேர்ந்த பேஸ்புக் நண்பர் ஒருவருடன் மெசஞ்ஜர் மூலம் சமகால அரசியல் தொடர்பாக விவாதிக்கும்போது, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் செயற்பாடுகளை விமர்சித்தும் இழிவுபடுத்தியும் ஷபீக் ரஜாப்தீன் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இதனை குறித்த நபர், பேஸ்புக் வாயிலாக அம்பலப்படுத்தியதை தொடர்ந்து அவர் மீது பலத்த கண்டனமும் விமர்சனமும் எழுந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Apr 2025
30 Apr 2025