2025 மே 03, சனிக்கிழமை

ஹெரோய்ன் வியாபாரி உட்பட இருவர் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 31 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, நகவம்புரப் பிரதேவத்தில் ஹெரோய்ன் வியாபாரி உட்பட இருவரை, 790 மில்லிக்கிராம் ஹெரோய்னுடன் நேற்று வெள்ளிக்கிழமை (30) மாலை, கைதுசெய்துள்ளதாக அம்பாறை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலயடுத்து அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலைய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகார் சஞ்சீவ, சப் இன்பொஸ்டர் வை.விஜயராஜ் ஆகியோர் தலைமையிலான பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அவ்வேளையில், அங்கிருந்து ஹெரோய்னை வாங்கிக்கொண்டு வெளியே வந்த 20 வயதுடைய இளைஞனை நிறுத்தி சோனையிட்ட போது, இளைஞனிடமிருந்து 110 மில்லிக்கிராம் ஹெரோய்னை மீட்டு, இளைஞனைக் கைதுசெய்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 680 மில்லிக்கிராம் ஹெரோய்னை மீட்டதுடன், கொழும்பு - கங்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய  வியாபாரியைக் கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X