Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 15 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நமது நாட்டில் சிக்கன் பாக்ஸ் (சின்னம்மை) நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகின்றது. குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்கள் உட்பட அனைவரும் சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநோயைத் தடுக்க உதவும் வெரிசெல்லா தடுப்பூசி தற்போது அரச மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லையென அறிய முடிகின்றது. முன்னணி தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியின் விலை ரூ.7,500 முதல் ரூ.9,500 வரை இருப்பதாக அறியமுடிகின்றது.
நோயாளிக்கு சின்னம்மை தோற்றியதன் பிறகு, 72 மணிநேரத்துக்குள் தடுப்பூசி போடவேண்டும். அந்த காலக்கெடுவிற்குள் தடுப்பூசி போடுவது, சின்னம்மை வருவதற்கான அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம் அல்லது தொற்று ஏற்பட்டால் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
மேலும், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற வேண்டும்,” என குழந்தை மருத்துவ ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
கொவிட்-19 க்கு முன்னர், காலரா என்பது உலகின் பழமையான மற்றும் மிகவும் அஞ்சப்படும் நோய்களில் ஒன்றாகும்.
பின்னர் டைபஸ், தொழுநோய், பெரியம்மை, வெறி நாய்க்கடி, மலேரியா, காசநோய் மற்றும் பல்வேறு வகையான காய்ச்சல்கள் ஒன்றன்பின் ஒன்றாக மனித குலத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இடைக்காலத்தில், பிளேக் மிகவும் கடுமையாகப் பரவியதால் ஐரோப்பாவின் மக்கள் தொகையில் பாதிப் பேர் இறந்தனர்.
கொவிட்-19 உலகின் கடைசி தொற்றுநோய் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடந்த 2019 நவம்பரில் சீனாவின் வுஹானில் உள்ள வௌவால் மற்றும் கோவேறு கழுதை இறைச்சிக் கடைகள் மற்றும் காட்டுப்பன்றி இறைச்சிகளிலிருந்து தோன்றிய கொவிட்-19 வைரஸ் இலங்கையையும் அதன் பொருளாதாரத்தையும் முற்றிலுமாக அழித்தது.
கொவிட்-19 க்குப் பிறகு, நோய் முடிந்து விட்டது என்று நாங்கள் முடிவு செய்தோம். இதற்கிடையில், பாக்டீரியா வடிவில் மற்றொரு கொடிய பொருள் பரவத் தொடங்கியுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா இறந்த சதையை உண்கிறது. பாக்டீரியா மனித உடலில் ஊடுருவி சதையை உண்கிறது. இந்த நோய் இலங்கையில் இனங்காணப்படவில்லை.
சின்னம்மையின் நோய் காப்புக் காலம் 10இல் இருந்து 21 நாட்களாகும். இது நோயுற்ற ஒருவர் தும்முவதினாலும் இருமுவதினாலும் சுலபமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது. அம்மைக் கொப்புளங்களில் வரும் நீர் கசிவு மற்றவர்கள் மேல் நேரடியாகப் படுவதினாலும் பரவுகிறது.
வழக்கமாக மூலத் தொற்று ஏற்பட்டதற்குப் பின்பு வாழ்நாள் முழுவதும் சின்னம்மை மறுபடியும் ஏற்படாமல் இருக்க நோய்த் தடுப்பாற்றல் கிடைக்கிறது.ஆகையால், குறைபாடுகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இல்லையேல், மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் இக்காலப் பகுதியில், சாதாரண மக்களிடத்தில் சின்னம்மை வேகமாகப் பரவிவிட்டால், கடுமையான பிரச்சினைகளை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்பதே எமது அவதானிப்பாகும்.
15.05.2025
40 minute ago
44 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
2 hours ago
3 hours ago