Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 22 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு டொலர்களை ஈட்டித் தரும் முக்கிய ஏற்றுமதித் தொழில்களில் ஒன்றான ஆடைத் தொழில் நெருக்கடியில் உள்ளது. சில தொழிற்சாலைகள் பகுதியளவில் மூடப்படுகின்றன.
ஒருசில ஆடைத்தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்படுகின்றன. இதனால், அங்கு பணியாற்றிய பலரும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரிய ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவதாகவும், ஏற்றுமதியாளர்களின்
இலாபத்தின் மீது அரசாங்கம் 30% வரி விதித்ததாலும், மின்சாரச் செலவுகள் 160% அதிகரித்ததாலும் ஆடைத் தொழில் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் தொழிலதிபர்கள் சமீபத்தில் கூறியிருந்தனர்.
இதுவரை, ஏற்றுமதியாளர்களுக்கு 14% சலுகை வரி விதிக்கப்பட்டது. இது இப்போது லாபத்தில் 30% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள துறைமுக மற்றும் விமான வரிக்கு கூடுதலாக, மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதலாக 2.5% வரி விதிக்கப்படுகிறது,
மேலும் அந்த வரி இலங்கையிலிருந்து வாங்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் கூடுதல் வரியாக சேர்க்கப்படுகிறது. “குறைந்தது 40 சிறு மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இப்போது மூடப்பட்டுள்ளன பெரிய அளவிலான தொழிற்சாலைகளும் படிப்படியாக மூடப்படுகின்றன.
அவர்களின் சில கிளைகள் மூடப்பட்டு, ஊழியர்கள் வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கு தொழில் புரிந்த சாதாரண மக்கள் மட்டுமன்றி, அவர்களைத் தங்கிவாழ்வோரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கட்டுநாயக்கவில் இயங்கி நெக்ஸ்ட் என்ற ஆடைத் தொழிற்சாலை, புதன்கிழமையுடன் மே.20 மூடப்பட்டது. 1978 முதல் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலை, இங்கிலாந்தில் ஒரு முதலீட்டுத் திட்டமாகும்.
அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அதன் ஊழியர்கள் கூறுகின்றனர். இலங்கையில் தற்போதைய உற்பத்தி செலவுகள் இனி நிலையானதாக இல்லாததால், இந்த தொழிற்சாலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் ஊழியர்களுக்கு வழங்கிய ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
இன்னும் பல நிறுவனங்களில் ஊழியர்களைக் குறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் முறை கைவிடப்பட்டுள்ளது. இருக்கும் பணியாளர்களை வைத்து, இரண்டு, மூன்று நபர்களின் வேலைகளை செய்வித்துக்கொள்கின்றனர்.
ஒரு ஆடை தொழிற்சாலை மூடப்படுவதால், அங்கு பணியாற்றியவர்கள் மட்டுமன்றி, அவர்களைத் தங்கி வாழ்வோரும், அந்த தொழிற்சாலைக்கு அண்மையிலிருந்த சிறுசிறு வர்த்த நிறுவனங்களை நடத்திவந்தவர்களும், பணியாளர்கள் தங்குவதற்காகத் தங்குமிட வசதிகளை வழங்கியவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
பொருளாதார ரீதியில் கடுமையான பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றனர்.
2024ஆம் ஆண்டு புள்ளி விபரவியலின் அடிப்படையில், இலங்கையில் ஆடைத் தொழில் நேரடியாக சுமார் 300,000 முதல் 350,000 தொழிலாளர்களைப் பணியாற்றுகின்றனர்.
350,000 பேர் மறைமுகமாகப் பணியமர்த்தப்பட்டனர். இந்தத் தொழில், குறிப்பாகப் பெண்களுக்கு, ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஆதாரமாக உள்ளது, அவர்கள் கிட்டத்தட்ட 70% பணியாளர்களைக் கொண்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதியில் ஆடைத் துறை
40 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
22.05.2025
7 minute ago
22 minute ago
24 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
24 minute ago
29 minute ago