Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 24 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழும் குழந்தை முதல், வயோதிபர்கள் வரையிலும் ஒவ்வொருடைய கைகளிலும் அலைபேசிகள் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் ஒரு விரல் நுனியில் சுருங்கி விட்டது எனலாம். வீட்டில் இருக்கும் உறவுகள், வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் கூட, நேரத்தை ஒதுக்கிக் கதைப்பதற்கான நேரத்தையும் அலைபேசி அபகரித்து விட்டது.
சமூக வலைத்தளங்களை தொடர்ந்து பல மணி நேரம் பார்க்கும் போது, ஏதோ ஒன்றை இழந்துவிட்ட பய உணர்வு வருவது தான், தற்போது இளம் வயதினரை வெகுவாக பாதிக்கும் ‘பெமோ’ என்ற மன நோயாகும்.
பெரும்பாலான மனநோய்களுக்கான சரியான காரணம் நமக்குத் தெரியாது, ஆனால் அவை அனைத்தும் மூளையின் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்றன என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபோன்ற நோய்களில் மரபணு தாக்கமும் உள்ளது.
காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை தங்களின் ஒவ்வொரு அசைவையும் வீடியோ எடுத்து, பல தளங்களில் வெளியிடும் வேலையை மட்டுமே செய்பவர்கள் உள்ளனர். தொடர்ந்து இந்த வீடியோக்களை ‘ஸ்குரோல்’ செய்யும் குழந்தைக்கு, ஒரு வித பய உணர்வு ஏற்படுகிறது. அதாவது, இவர்களைப் போன்று நாம் மகிழ்ச்சியாக இல்லையோ,
எல்லா நேரமும் சுறுசுறுப்பாக ஏதோ ஒன்றை இவர்கள் செய்கின்றனர். நாம் எதுவும் செய்யாமல் வீணாக இருக்கிறோமோ என்ற பயம். பொதுவாக இது போன்ற உணர்வு,
12-24 வயதினருக்கு அதிகம் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வயதுக்கு இடைப்பட்டவர்களில் பலரும் விளையாட்டு மைதானங்களுக்குச் செல்லாமல், அலைபேசிகளிலேயே பல மணிநேரத்தைக் கழிக்கின்றனர்.
இவர்களைப் போன்று நாமும் ஆடை அணிய வேண்டும். புதுப்புது இடங்களுக்கு செல்ல வேண்டும். குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக வீடியோ எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் அப்-லோட் செய்து ‘லைக்’குகளை அள்ள வேண்டும் என்ற அழுத்தம் வந்து விடுகிறது.
நான் மட்டும் எல்லாவற்றையும் இழக்கிறேன் என்ற பய உணர்வு வருகிறது. இதன் வெளிப்பாடு தான், எதற்கெடுத்தாலும் கோபம், பிடி வாதம், பெற்றோர் எது சொன்னாலும் எதிர்த்து பேசுவது அதிகரிக்கிறது. குழந்தைகள் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர்கள் ஏதோ சாதிக்கின்றனர் என்ற உணர்வைத் தருகின்றனர் என்பது நிஜம். நாம் சமூக வலைத்தளங்களில் பார்க்கும் மற்றவர்களின் வாழ்க்கை உண்மையில் அவர்களின் வாழ்க்கை தானா என்பது தெரியாது.
அதற்குப் பின்னால் நிறையப் போராட்டம், சலிப்பு, விரக்தி இருக்கலாம். அதை மறைத்து, வெளி உலகிற்கு, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இதைச் செய்யலாம். மாறாக, வீடியோவில் பார்ப்பது தான் நிஜம் என்று நாம் நம்புவ தால் தான் பயம் வருகிறது. இது உண்மை கிடையாது என்பது தெரிந்தால் பய உணர்வு விலகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago